தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிறார் மு.க.ஸ்டாலின்

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 3:16 pm

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டப்பேரவைத் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அவர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆவது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை – அறிவாலயத்தில் இன்று (24) நடைபெற்ற திமுக தலைமை செயற்குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற 89 உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு 98 இடங்கள் கிடைத்துள்ளன. திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

திமுக கூட்டணிக்கு 98 சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருப்பதால் சட்டப்பேரவையில் கடும் சவாலை ஏற்படுத்த முடியும்.

எனவே, திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தெரிவு செய்யப்படுபவர்தான் எதிர்க்கட்சித் தலைவராக முடியும்.

இந்நிலையில், திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

”திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாகிவிட்டால் சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்க முடியாது. அவர் அமர்வதற்கு ஏற்ப இருக்கை வசதியும் செய்யமாட்டார்கள். எனவே, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்’ என்று திமுக தரப்பினர் தெரிவித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்