கிங் கங்கையில் இருவரை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

கிங் கங்கையில் இருவரை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

கிங் கங்கையில் இருவரை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 10:22 am

எல்பிட்டிய, பத்தேகம கிங் கங்கையில் இரு பெண்களை தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த தினத்தில் குறித்த இருவரையும் தாக்கி இவ்வாறு ஆற்றில் தள்ளிவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் தள்ளிவிடப்பட்ட நிலையில் காணாமற்போன பெண்ணின் சடலம் நேற்று கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் மற்றுமொரு யுவதி காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தில் 34 வயதுடைய தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த தாயின் மகளான குறித்த யுவதி பிரதேசத்தில் உள்ள இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பை பேணி வந்த நிலையில் யுவதியின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் பதிவேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மோதலே இந்த சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்