எதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு

எதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 9:51 am

எதிர்காலத்தில் நாட்டின் கல்வி முறையில் மாற்றத்தை கொண்டுவர எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பம்பலப்பிட்டு முஸ்லிம் மகளீர் கல்லூரியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்தக்கருத்தை தெரிவித்தார்.

இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து…

[quote]நாட்டின் பொருளாதாரத்தில் சிறு சிறு குறைகள் இருக்கின்றன, ஆனால் எங்களுக்கு முன்னோக்கி செல்ல முடியும்.100 இற்கு 50 வீதமானோருக்கு கல்வி கிடைக்கப்பெறுவதில்லை.தனியார் பாடசாலைகளை தவிர்த்து அரச பாடசாலைகளை எடுத்து கொண்டால் இந்த நிலைமை இன்னும் மோசமாக காணப்படும்.தனியார் பாடசாலைகளின் பரீட்சை பெறுபேறுகள் மாறுப்பட்டது.அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை வழங்குவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்