இலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்

இலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்

இலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 9:09 am

இலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளர் பதவிக்கு இங்கிலாந்தின் சைமன் விலிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கென்ட் கிரிக்கெட் குழாமின் திறன் விருத்தி பணிப்பாளராக செயலாற்றிய சைமன் விலிஸ் இலங்கை அணியின் திறன் விருத்தி முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் விலிஸ் வருகின்ற ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பம் தனக்கு கிடைத்ததனை முன்னிட்டு இலங்கைக்கு தனது நன்றிகளை 42 வயதான சைமன் விலிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை முன்கொண்டு செல்வது தொடர்பான அனைத்து ஆக்க பூர்வ முயற்சிகளையும் தான் மேற்கொள்ள தயாராகவுள்ளதாக சைமன் விலிஸ் தெரிவிக்கின்றார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்