அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் மீட்பு

அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

24 May, 2016 | 8:15 pm

அரநாயக்க மண்சரிவில் உயிரிழந்த 40 பேரின் சடலங்கள் மற்றும் உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வனசூரிய தெரிவித்தார்.

கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவினால் 59 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

161 வீடுகள் முற்றாகவும், 1350 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

11,494 பேர் 102 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியமர்த்துவதற்குத் தேவையான காணிகளை அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அபேவிக்ரம வனசூரிய தெரிவித்தார்.

சேதமடைந்த வீடுகளுக்கு அரச சுற்றுநிரூபம் பிரகாரம் நட்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்