அரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களில் 27 பேரின் சடலங்கள் மீட்பு

அரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களில் 27 பேரின் சடலங்கள் மீட்பு

அரநாயக்க மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களில் 27 பேரின் சடலங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

24 May, 2016 | 6:50 am

அரநாயக்கவில் அண்மையில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமற்போன 27 பேரின் சடலங்கள் நேற்றுவரை மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கடும் மழை காரணமாக கடந்த 17 ஆம் திகதி அரநாயக்க, சாமசர கந்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிரிபுர, எலகபிடிய உள்ளிட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பாதிப்பிற்குள்ளாகினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்