பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட 49 குளங்கள் சேதம்

பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட 49 குளங்கள் சேதம்

பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட 49 குளங்கள் சேதம்

எழுத்தாளர் Staff Writer

22 May, 2016 | 11:58 am

பலத்த மழை காரணமாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்குட்பட்ட 49 குளங்கள் சேதமடைந்துள்ளன.

குருநாகல் மாவட்டத்தில் மாத்திரம் 19 குளங்கள் சேதமடைந்துள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பிரதானி பிரபாத் வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மட்டக்களப்பில் 08 குளங்களும், அம்பாறையில் 09 குளங்களும், திருகோணமலையில் 03 குளங்களும் அதிக மழை காரணமாக முற்றாக சேதமடைந்துள்ளன.

இதேவேளை, புத்தளத்தில் ஒரு குளமும் மொனராகலையில் 3 குளங்களும் மழை காரணமாக சேதமடைந்துள்ளதாகவும் விவசாய அபிவிருத்தின் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பிரதானி பிரபாத் வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.

குளங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட நீரினால் பாரிய அளவில் வௌ்ள பெருக்கு ஏற்படவில்லை எனினும் சில பகுதிகள் நீரில் ஓரளவு மூழ்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்