அரநாயக்கவில் மண்சரிவில் சிக்கி காணாமற்போன 14 பேரின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

அரநாயக்கவில் மண்சரிவில் சிக்கி காணாமற்போன 14 பேரின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

அரநாயக்கவில் மண்சரிவில் சிக்கி காணாமற்போன 14 பேரின் உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 May, 2016 | 12:16 pm

கேகாலை அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவில் உயிரிழந்தவர்களில் 11 பெண்கள் 05 ஆண்களின் சடலங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் 14 பேரின் உடற்பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய அரநாயக்க மண்சரிவில் சிக்குண்டுள்ளவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை மண்சரிவில் சிக்கி காணாமற்போயுள்ளவர்களில் 77 பெண்களும் 62 ஆண்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொடரும் மழையுடனான வானிலைக் காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்