அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்:  ஜனாதிபதி பணிப்புரை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி பணிப்புரை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம்: ஜனாதிபதி பணிப்புரை

எழுத்தாளர் Staff Writer

22 May, 2016 | 7:19 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டிய, மீதொட்டுமுல்ல, கொலன்னாவை பகுதியிலுள்ள மக்களை இன்று (22) சந்தித்தார்.

வெல்லம்பிட்டிய பகுதிக்கு சென்ற ஜனாதிபதி, வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டு வித்தியாவர்த்தன வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தினார்.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை வழங்குவமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு இதன்போது உத்தரவிட்டார்.

அதனையடுத்து, மீதொட்டுமுல்லை தர்மோதய விகாரை மற்றும் கொலன்னாவை நாஹவனாராமய விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி அங்கிருக்கும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொண்டார்.

இதன்போது அனர்த்தத்தினால் பாதிக்கப்படட மக்களின் நலன்கள் தொடர்பில் எடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்