சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

21 May, 2016 | 9:11 am

வரைறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் மற்றும் ஜோன் கீல்ஸ் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சிரசா நமாமி வெசாக் வலயம் இன்று ஆரம்பமாகவுள்ளது.

வெசாக் வலயம் நாளையும் (22) நாளை மறுதினமும் (23) மக்களுக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

அத்துடன் கொழும்பு 02 பிரேபுருக் பிளேஸில் அமைந்து கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தில் வெசாக் வலயத்தை திறந்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிரச வெசாக் வலயத்திற்கு வருபவர்களுக்கு புத்தரின் புனித சின்னங்களை வழிபடுவதற்கான சந்தரப்பம் கிட்டவுள்ளது.

அத்துடன் வெசாக் தோரணங்கள்,வெளிச்சக் கூடுகள் மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகளையும் வெசாக் வலயத்தில் கண்டுகளிக்கலாம்.

மேலும் இங்கு வரும் பக்தர்களுக்காக அன்னதான ஏற்பாடும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்று பிற்பகல் 4 மணி முதல் சிரசா நமாமி வெசாக் வலயம் பக்தர்களுக்காக திறந்து விடப்படவுள்ளதாக சிரச ஊடக வலையமைப்பின் ஆலோசகர் சுசார தினால் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்