வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு

வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு

வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 7:51 am

வௌ்ளத்தில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் இன்றும் முன்னெடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.

மேலும் பலர் வௌ்ளத்தில் சிக்கியுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார்.

இந்த மக்களை பாதுகாப்புடன் மீட்பதற்காக போதுமான எண்ணிக்கையில் மீட்புப் படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களுக்கு உணவை விநியோகிப்பதில் சிக்கல் காணப்படுமானால் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112 670 002 அல்லது 011 2136136 என்ற இலக்ககங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்