வெசாக் வலயத்திற்கு புனித சின்னங்களைக் கொண்டுவரும் ஊர்வலம் நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு

வெசாக் வலயத்திற்கு புனித சின்னங்களைக் கொண்டுவரும் ஊர்வலம் நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு

வெசாக் வலயத்திற்கு புனித சின்னங்களைக் கொண்டுவரும் ஊர்வலம் நான்காவது நாளாகவும் முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 1:05 pm

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிரச,ஜோன் கீல்ஸ் வெசாக் வலயத்திற்கு புனித சின்னங்களை கொண்டுவரும் ஊர்வலம் நான்காவது நாளாகவும் இன்று இடம்பெறுகின்றது.

புத்த பகவானின் புனித கேஷங்கள் உள்ளிட்ட புனித சின்னங்கள் இன்று நிட்டம்புவ விஹாரையில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன.

வாகனப் பேரணி பஸ்யால ஊடாக கடவத்த கிரிபத்கொட ஊடாக களனி ரஜமஹா விஹாரையை இன்று பிற்பகல் வந்தடையவுள்ளது.

இதேவேளை, புத்த பகவானின் பிரதம சீடர்களான செரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்கள் இன்று ரத்தேகம கிஹிம்பி எல விஹாரையில் இருந்து ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றன.

இதனை முன்னிட்டு விசேட மத அனுஷ்டானங்களும் நடைபெற்றன.

இந்த புனித சின்னங்களை கொண்டுவரும் வாகனப் பேரணி இன்று பிற்பகல் களுத்துறையை வந்தடையவுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்