பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சீனா அனுதாபம்

பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சீனா அனுதாபம்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 8:58 pm

மழையுடன் கூடிய வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு சீனா அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு நேற்றைய தினம் சென்ற சீன தூதுவர் ஷியெங்லின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மீள கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சீனா அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குவதாக இதன்போது அவர் கூறினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் செயற்படும் இலங்கை அரசாங்கத்தால் மக்களின் வீடுகளை மீள கட்டியெழுப்பும் விடயங்களுக்கு தீர்வு காண முடியும் என சீனா நம்புவதாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

எந்தவொரு அனர்த்தத்தின் போதும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சீனா முதலில் முன் நிற்பது தொடர்பில் ஜனாதிபதி இதன்போது சீன அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துள்ளதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்