நிவாரண யாத்தி​ரை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

நிவாரண யாத்தி​ரை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 9:22 pm

கடும் மழை, புயல், வௌ்ளம் மற்றும் மண்சரிவு ஆகிய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக சக்தி, சிரச, ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை பிரென்டிக்ஸூடன் இணைந்து இன்று முன்னெடுக்கப்பட்டது.

வௌ்ளத்தினால் அதிகளவானோர் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக புறப்பட்டுச் சென்ற நிவாரண குழுவினர் கொலன்னாவை, மீதொடமுல்ல, முல்லேரியா, அங்கொடை உள்ளிட்ட பல பகுதிகளுக்குச் சென்றனர்.

வௌ்ளத்தினால் சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக புறப்பட்ட எமது குழுவினர் கம்பஹா நகரசபை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு முதலில் சென்றனர்.

மண்சரிவு மற்றும் வௌ்ளம் காரணமாக அதிகளவான மரணங்கள் பதிவாகிய கேகாலை மாவட்டத்தை இன்று மாலை மற்றுமொரு குழுவினர் சென்றடைந்தனர்.

மேலும், பலர் பாதிக்கப்பட்டுள்ள புத்தளம் மாவட்டத்திற்கும் நிவாரணக் குழுவினர் சென்றிருந்தனர்.

இதேவேளை, வெள்ளத்தினால் வடமாகாணத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்திலும்
மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐந்து நாட்களாக பெய்த கடும் மழை, வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கொழும்பு, கம்பஹா, கேகாலை, புத்தளம் மற்றும் கிளிநொச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரிசன்ஸ் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற சர்வமத பிரார்த்தனைகளின் பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக, சக்தி, சிரச, ஜோன் கீல்ஸ் நிவாரண யாத்திரை பிரென்டிக்ஸ் நிநிறுவனத்துடன் இணைந்து இன்று காலை பயணத்தை ஆரம்பித்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்