நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும்

நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 8:31 am

நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொஆனு சூறாவளி காரணமாக நாட்டின் சில இடங்களில் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் குறிப்பிட்டார்.

இதேவேளை, கடற்பிராந்தியங்களில் அடிக்கடி இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றராக காணப்படும் என்றும் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்