தெற்கு அதிவேக வீதியின் கடுவளை நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக வீதியின் கடுவளை நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

தெற்கு அதிவேக வீதியின் கடுவளை நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 7:29 am

மழை வௌ்ளம் காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கடுவளை நுழைவாயில் தொடர்ந்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதிவேக வீதியின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடையில் கட்டணமின்றி பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதியின் மேற்பார்வை மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஒபநாயக்க தெரிவித்தார்.

கடுவெல, ஹங்வெல்ல மற்றும் பியகம பாதைகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதால், அதிவேக வீதியின் கடுவெல பரிமாற்றப் பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே தொடர்ந்தும் மழை பெய்து வருகின்ற நிலையில் அதிவேக வீதியூடாக தங்களால் கட்டுப்படுத்தக்கூடிய வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறும் வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் 11 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

லுனுகம் வெகஹேர நீர்தேக்க்ததின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாச திணைக்களத்தின் நீர் முகாமையாளர் மற்றும் பயிற்சி பணிப்பாளர் மோகன ராஜா தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்