தமிழக தேர்தலில் நோட்டாவை நாடிய 5,60,000 வாக்காளர்கள்

தமிழக தேர்தலில் நோட்டாவை நாடிய 5,60,000 வாக்காளர்கள்

தமிழக தேர்தலில் நோட்டாவை நாடிய 5,60,000 வாக்காளர்கள்

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 3:56 pm

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில் எந்த வேட்பாளருமே வேண்டாம் என்று நோட்டாவுக்கு (NOTA – None of the above) 5 இலட்சத்து 60 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.

ஒரு தொகுதியில் எந்த வேட்பாளருக்குமே வாக்களிக்க விருப்பமில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்கும் உரிமை மக்களுக்கு வேண்டும் என சமூக அமைப்புக்கள் போராடிப் பெற்றன.

இந்நிலையில், 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 1.3 சதவீத வாக்குகள் நோட்டாவிற்கு இடப்பட்டுள்ளன.

மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற பிரபல கட்சிகள் கூட இத்தனை சதவீத வாக்குகளைப் பெறவில்லை என்பதுதான் குறிப்பிடத்தக்க விடயம்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள், சதவீத விவரம் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்:-

அதிமுக 40.8 (1,76,17,060)
திமுக 31.6 (1,36,70,511)
காங்கிரஸ் 6.4 (27,74,075)
பாமக 5.3 (23,00,775)
பாஜக 2.8 (12,28,692)
தேமுதிக 2.4 (10,34,384)
நாம் தமிழர் கட்சி 1.1 (4,58,104)
மதிமுக 0.9 (3,73,713)
இந்திய கம்யூனிஸ்ட் 0.8 (3,40,290)
விடுதலை சிறுத்தைகள் கட்சி 0.8 (3,31,849)
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 0.7 (3,13,808)
மார்க்சிஸ்ட் 0.7 (3,07,303)
தமாகா 0.5 (2,30,711)
புதிய தமிழகம் 0.5 (2,19,830)
மனிதநேய மக்கள் கட்சி 0.5 (1,97,150)
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி 0.4 (1,67,560)
பகுஜன் சமாஜ் 0.2 (97, 823)
எஸ்டிபிஐ 0.2 (65, 978)
நோட்டா 1.3 (5,61,244)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்