”சிரச – ஜோன் கீல்ஸ்” வெசாக் வலயம் நாளை ஆரம்பம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

”சிரச – ஜோன் கீல்ஸ்” வெசாக் வலயம் நாளை ஆரம்பம்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 9:48 pm

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ”சிரச – ஜோன் கீல்ஸ்” வெசாக் வலயம் நாளை ஆரம்பமாகவுள்ளது.

புனித சின்னங்களைக் கொண்டுவரும் ஊர்வலம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

புத்த பகவானின் புனித கேஷங்கள் உள்ளிட்ட புனித சின்னங்களை வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான ஊர்வலம் இன்று நிட்டம்புவ புரானகந்த ரஜமகா விகாரையில் ஆரம்பமாகியது.

வாகனத் தொடரணி பஸ்யால ஊடாக கிரிபத்கொடை, களனி ரஜமகா விகாரையை இன்று மாலை வந்ததடைந்தது.

இதேவேளை, புத்த பகவானின் பிரதம சீடர்களான சரியுத் – முகலனின் புனித சின்னங்களைக் கொண்டுவரும் ஊர்வலம் ரத்தேகம கிஹிஅல ஸ்ரீ விஜேவர்மராமய விகாரையில் ஆரம்பமாகியது.

புத்த பகவானின் பிரதம சீடர்களான, சரியுத் – முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்களைத் தாங்கிய வாகனத் தொடரணி பத்தேகம, அல்பிட்டி, பெந்தோட்டை, பேருவளை ஊடாக இன்று பிற்பகல் களுத்துறையை வந்தடைந்தது.

சிரச நமாமி வெசாக் வலயத்தை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்