அரநாயக்க மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

அரநாயக்க மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

அரநாயக்க மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 7:16 am

அரநாயக்க, சிரிபுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாக மேற்குப் பிராந்திய பாதுகாப்பு படையணின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்த சடலங்கள், தற்போது மீட்பு பணிகளை முன்னெடுக்கும் பாடசாலைக் கட்டடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, மத அனுஷ்டானங்களின் பின்னர் மயானத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மண்சரிவில் சிக்குண்டு காணாமற்போனவர்களை தேடும் பணிகள் இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளதாக மேஜர் ஜெனரல் கூறினார்.

இதேவேளை, மண்சரிவுகளில் காணாமற்போனோரின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுமார் 300 இராணுவத்தினரும், 50 விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நேற்றைய தினம் முழுவதும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டபோதிலும், இடைக்கிடையே மழை குறுக்கிட்டதால் அந்த பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலைமையின் கீழ், மீட்புப் பணியாளர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்துகொண்டு மீட்பு பணிகளை தொடரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மேற்குப் பிராந்திய பாதுகாப்பு படையணின் கட்டளைத் தளபதி தெரிவித்தார்.

கொழும்பில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அந்த மக்களது வீடுகளின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்