அம்மாவுக்கு நமீதா அறிக்கை மூலம் வாழ்த்து

அம்மாவுக்கு நமீதா அறிக்கை மூலம் வாழ்த்து

அம்மாவுக்கு நமீதா அறிக்கை மூலம் வாழ்த்து

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 4:35 pm

மீண்டும் ஜெயலலிதாவே தமிழக முதலமைச்சரானமைக்கு நடிகை நமீதா வாழ்த்துக்கள் கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதில் ”புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா தலைமையிலான அதிமுக அமோகமாக வெற்றி பெற்றுள்ளது. இது அம்மாவின் நிர்வாகத் திறனுக்கும், ஆட்சி முறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி. ஏழை மக்களுக்கும் தினமும் பசியில் வாடுவோருக்கும் அம்மா ஏற்படுத்திய நலத்திட்டங்கள் தான் வாக்குகளாக மாறியுள்ளன. இனி வரும் ஐந்தாண்டுகளும் அம்மாவின் தலைமையில் பொற்கால ஆட்சி தொடரப்போகிறது, வரும் தலைமுறைகளின் நோக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் அம்மா அவர்கள் பூர்த்தி செய்வார். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்கள் பெற்ற பெருவெற்றிக்கு என் பணிவார்ந்த வாழ்த்துகள்,”

என அந்த அறிக்கையில் நமீதா கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்