அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வு

எழுத்தாளர் Bella Dalima

20 May, 2016 | 10:16 pm

அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்வடைந்துள்ளது.

மூன்று இலட்சத்து 19 ஆயிரத்து 507 பேர் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். 131 பேர் காணாமற்போயுள்ளனர்.

இதேவேளை, அரநாயக்க சிறிபுர பகுதியில் மண்சரிவினால் காணாமற்போன நால்வரின் சடலங்களைப் பாதுகாப்புப் பிரிவினர் இன்று மீட்டனர்.

காணாமற்போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டன.

தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து இன்றும் அந்தப் பிரதேசத்தில் இடைக்கிடையே மழை பெய்தமையால் தேடுதல் நடவடிக்கைகள் சில சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இதுவரையில் 18 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இன்றைய தினம் சடலங்களின் பகுதிகளும் மீட்கப்பட்டதாக மேற்கு பிராந்தியத்திற்கு பொறுப்பான கட்டளைத்தளபதி மேஜர் ​ஜெனரல் தெரிவித்தார்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்