அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அனுதாபம்

 அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அனுதாபம்

 அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு அனுதாபம்

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 11:47 am

பலத்த மழையுடனான வானிலையால் நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுநலவாய நாடுகள் அமைப்பு தமது அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

பொதுநலவாய அமைப்பின் சார்பாக இலங்கைக்கும், அந்த நாட்டு மக்களுக்கும் தமது கவலையை தெரிவித்துக்கொள்வதாக, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பெற்றீசியா ஸ்கொட்லன்ட் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பேரழிவை எதிர்நோக்கியுள்ள குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு நிவாரண நடவடிக்கைகள் ஊடாக உதவிக்கரம் நீட்டுவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சவால் மிகுந்த இத்தகைய சூழ்நிலையில், தைரியத்துடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் சேவையை பொதுநலவாய நாடுகள் அமைப்பு பாராட்டுவதாகவும் பெற்றீசியா ஸ்கொட்லன்ட் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கைக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு பொதுநலவாய அமைப்பின் அங்கத்துவ நாடுகளிடம் அவர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்