இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் இலங்கை வருகை

இந்தியாவிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் 2 கப்பல்கள் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

20 May, 2016 | 1:26 pm

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய , இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களை ஏற்றிய 2 கப்பல்களை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதில் ஒரு கப்பல், ஏற்கனவே கொச்சின் துறைமுகத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது கப்பலும் சற்று நேரத்தில் இலங்கை நோக்கி புறப்படவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாம் வினவிய போது இலங்கை கடற்படையும் அந்த தகவலை உறுதிப்படுத்தியது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் சட்லேஜ் மற்றும் ஐ.என்.எஸ் சுனேனா ஆகிய கப்பல்கள் நிவாரணப் பொருட்களுடன் இலங்கை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்