அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்க, அநுநாயக்க தேரர்களுக்கு நியமனப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்க, அநுநாயக்க தேரர்களுக்கு நியமனப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்க, அநுநாயக்க தேரர்களுக்கு நியமனப் பத்திரங்களை வழங்கினார் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

17 May, 2016 | 10:12 pm

அஸ்கிரிய பீடத்தின் புதிய மகாநாயக்கர் வரக்காகொட ஶ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் புதிய அநுநாயக்கர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் ஆகியோருக்கு நியமனப் பத்திரம் வழங்கும் வைபவம் அரச மரியாதையுடன் கண்டியில் இன்று நடைபெற்றது.

இந்த வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய மகாநாயக்க மற்றும் அநுநாயக்க தேரர்கள் சம்பிரதாயப்பூர்வமாக கண்டி ஶ்ரீ தலதா மாளிகையிலுள்ள விழா மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர், புதிய மகாநாயக்கர் மத அனுஸ்டானங்களை நிகழ்த்தினார்.

மகாநாயக்க மற்றும் அநுநாயக்க தேரர்களுக்கான நியமனப் பத்திரங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்