நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் அவதி

நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் அவதி

நாட்டின் பல பகுதிகளில் பெய்யும் கடும் காற்றுடன் கூடிய மழையால் மக்கள் அவதி

எழுத்தாளர் Staff Writer

15 May, 2016 | 10:46 am

அதிக மழைக் காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் சேதங்கள் பதிவாகியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக பல வீடுகளில் மழை வௌ்ளம் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்யும் மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் தகவல்கள் திரட்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மன்னார் தொடக்கம் திருகோணமலை வரையான கடற்பிராந்தியங்களில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய மழைக் காணரமாக மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

அதிக மழைக் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பில் இடர் முகாமைத்துவ நிலையம் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுவதாகவும் நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அசம்பாவிதங்கள் தொடர்பில் 1 1 7 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் இடர்முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்