கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வாரியபொல நகரில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டார்

கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வாரியபொல நகரில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டார்

கப்பம் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வாரியபொல நகரில் கடத்தப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2016 | 9:39 am

கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கத்தில் வாரியபொல நகரில் கடத்தப்பட்ட இளைஞன் இன்று அதிகாலை நிக்கவரெட்டிய பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை கடத்திய சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சம்பவம் குறித்து மேலும் பலர் தொடர்புட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டப்ளியூ.சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, கடத்தப்பட்ட இளைஞர் நிக்கவரெட்டிய பகுதியில் கைவிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறியுள்ளார்.

மீட்கப்பட்ட இளைஞன் நிக்கவரெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு கோடி ரூபா பணம் கப்பம் கேட்டு குறித்த இளைஞரை காரில் வந்த சிலர் நேற்று முந்தினம் கடத்தியமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்