English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
12 May, 2016 | 6:26 pm
ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பில் முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனை எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடயத்துடன் தொடர்புடைய வைத்தியர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் இலங்கை மருத்துவ சங்கத்தின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், தாஜுடீனின் கொலை தொடர்பான ஆதாரங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாரேஹென்பிட்ட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
உயர் அதிகாரியின் கட்டளைக்கு அமைவாகவே தமது கட்சிக்காரர் செயற்பட்டுள்ளதாக நாரேஹென்பிட்ட பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவருக்கு பிணை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறாததன் காரணமாக பிணை வழங்க முடியாது என சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர், உயர் அதிகாரியைக் குறிப்பிட்டு குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவருக்கு பிணை வழங்க முடியாது என அரச சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளனர்.
28 Apr, 2022 | 08:25 PM
11 Mar, 2022 | 03:16 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS