உகண்டா பயணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து

உகண்டா பயணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கருத்து

எழுத்தாளர் Bella Dalima

10 May, 2016 | 8:35 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் வைபவமொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தாதியர் தினத்தைக் கொண்டாடும் வகையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தை முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தலைமைத்துவம் தாங்கும் அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

வைபவம் நிறைவு பெற்றதும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டார்.

கேள்வி: நீங்கள் ஏன் உகண்டாவிற்கு செல்கின்றீர்கள்?

பதில்: ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்கின்றேன். அவரின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புக் கிடைத்துள்ளது.

கேள்வி: பனாமா ஆவணங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் கருத்துக்கூற முடியுமா?

பதில்: அதில் ராஜபக்ஸக்கள் இல்லையல்லவா?

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்