GSP+ வரிச்சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்

GSP+ வரிச்சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்

GSP+ வரிச்சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 8:54 am

GSP+ வரிச்சலுகையை பொற்றுக் கொள்வது தொடர்பில், ஐரோப்பிய ஒன்றித்துடன் எதிர்வரும் 11 ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடல் பெல்ஜியத்தின், ப்ரசல்ஸ் நகரில் இடம்பெறவுள்ளதாக பிரதி வெளிவிவகார பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

GSP+ வரிச்சலுகையை வழங்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பொய்யான தகவலொன்று எனவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறயினும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் GSP+ வரிச்சலுகையை பெற்றுக் கொள்வது தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்