வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழப்பு

வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழப்பு

வௌ்ளவத்தையில் ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 7:57 pm

கொழும்பு வௌ்ளவத்தையில் தொலைபேசியில் உரையாடிய வண்ணம் கொண்டு கடவையில் பயணத்த போது ரயிலில் மோதி காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் அந்த யுவதி உயிரிழந்ததாக தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கண்டி தொல்தோட்டை லூல்கந்துரை பகுதியைசக் சேர்ந்த காளிமுத்து செல்வி என்ற 19 வயதான யுவதியே ரயிலில் மோதி நேற்று பிற்பகல் உயிரிழந்திருந்தார்.

நேற்று மாலை பாணைந்துறையிலிருந்து வந்த ரயிலொன்றில் மோதியே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியகட்சகர் விஜய சமரசிங்க கூறினார்

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு சற்று தூரத்தில் அமைந்துள்ள
9 ஆம் மைல்கல் மற்றும் ஒன்பதரை மைல்கல்லுக்கு அருகில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

குறித்த யுவதி திருமணம் புரியவிருந்த இளைஞருடன் நேற்று வௌ்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்

குறித்த யுவதி இன்று தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் முற்பகல் உயிரிழந்ததாக தேசிய வைத்தியாசலையின் பிரதிப் பணிப்பாளர் சமிந்தி சமரகோன் கூறினார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்