வெள்ளவத்தையில் யுவதி ஒருவர் ரயிலில் மோதி காயம்

வெள்ளவத்தையில் யுவதி ஒருவர் ரயிலில் மோதி காயம்

வெள்ளவத்தையில் யுவதி ஒருவர் ரயிலில் மோதி காயம்

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 8:12 am

கொழும்பு வெள்ளவத்தையில் தொலைபேசியில் பேசிக்கொண்டு ரயில் கடவையில் பயணித்த யுவதி ரயிலில் மோதுண்டு காயமடைந்து்ளார்.

ரயிலில் மோதுண்டு காயமடைந்த யுவதி களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாணதுறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் நேற்று (08) மாலை 4.51 அளவில் இந்த யுவதி மோதுண்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தத்தில் காயமடைந்த யுவதியை அவளுடைய காதலன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கூறியுள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தியவாறு ரயில் மார்க்கத்தில் பயணிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்