யாழில் அண்மையில் சுற்றுலா பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஐவர் கைது

யாழில் அண்மையில் சுற்றுலா பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஐவர் கைது

யாழில் அண்மையில் சுற்றுலா பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஐவர் கைது

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 8:46 am

யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுற்றுலா பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நகரில் நேற்று (08) மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மானிப்பாய், கல்வியங்காடு, கோப்பாய், உரும்பிராய் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 9 பாரிய குற்றச் செயல்களுடன் சந்தேகநபர்கள் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடமிருந்து வாள், கோடரி, கத்தி உள்ளிட்ட பல கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், அண்மையில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டு சந்தேகநபர்களால் திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கில்களும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்