முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் உகண்டா பயணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் உகண்டா பயணம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் உகண்டா பயணம்

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 8:16 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் உகண்டா நோக்கி பயணிக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியது.

உகண்டா ஜனாதிபதி யுவேரி முஸவேனி ஐந்தாவது தடவையாகவும் பதவியேற்கும் வைபவம் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு அந்நாட்டு அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

கென்யா, எத்தியோப்பியா மற்றும் சூடானின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராஜ்ஜியமான உகண்டா கடந்த இரண்டு தசாப்தங்களில் படிப்படியாக சர்வதேசத்தில் அதிகளவில் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

யூவேரி முஸவேனி முதற்தடவையாக 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அதன் பின்னர் தொடர்ந்து 2001,2006 ஆம் ஆண்டு நடைபெறற் தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர்,2006 ஆம் ஆண்டு அந்நாட்டின் அரசியலமைப்பை மாற்றி பதவி வகிக்க முடியுமான கால எல்லையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் தேர்தலில் மோசடி இடம்பெற்றதாக பொதுநலவாக கண்காணிப்பாளர்கள் மற்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா என்பன குற்றம் சுமத்தின.

20 வருடங்காக நாட்டை ஆட்சி செய்யும் உகண்டாவின் தற்போதைய ஜனாதிபதி நாட்டை சர்வாதிகாரம் நோக்கி கொண்டு செல்வதாக சர்வதேச மனித உரிமை அமைப்பு தொடர்ந்து குற்றம் சுமத்தியது.

கொரில்லா அமைப்புக்களுக்கு ஆயுதம் வழங்கியமை தொடர்பில் முஸக்ஷேனிக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பினால் குற்றம் சுமத்தப்படுவதுடன், உகண்டா இராணுவத்தின் விசேட படையணியின் கட்டளையிடும் அதிகாரியாகவும் மூஹீசி செயற்படுகிறார்.

2012 ஆம் ஆண்டு அவ்வேளையில் ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பிற்கு ஏற்ப உகண்டா ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதுடன், மஹிந்த ராஜபக்ஸ 2013 ஆம் ஆண்டு அங்கு சென்றிருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்