பூநகரி பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு பணிகளுக்கு மக்களால் தடை

பூநகரி பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு பணிகளுக்கு மக்களால் தடை

பூநகரி பகுதியில் மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு பணிகளுக்கு மக்களால் தடை

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 8:29 pm

கிளிநொச்சி பூநகரி பரமங்கிராய் வெட்டுக்காடுப் பகுதியில் நில அளவை திணைக்களத்தினரால் இன்று மேற்கொள்ளப்பட்டவிருந்த அளவீட்டு பணிகள் பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று முற்பகல் பரமங்கிராய் வெட்டுக்காடுப் பகுதிக்கு வந்த நில அளவுத் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கையை மேற்கொள்ளவிடாது பிரதேச மக்கள் எதிர்பில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

பிரதேசத்தில் உள்ள 8 ஏக்கர் காணியை அளவீடு செய்வதற்கு திணைக்களத்தின் அதிகாரிகள் அங்கு சென்றிருந்தனர்.

இராணுவத்தினரின் தேவைக்காக பொதுமக்களின் காணி சுவீகரிக்கப்படுவதாக தெரிவித்து மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதை அடுத்து அளவீட்டு பணிகள் நிறுத்தப்படடதாக பிராந்திய செய்தியாளர் கூறினார்.

பூநகரி பரமங்கிராய் வெட்டுக்காடுப் பகுதியில் இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

குறித்த பகுதி இராணுவ தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், நில அளவை திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு இன்று சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் கூறினார்.

காணி உரிமையாளர்கள் என தெரிவித்து சிலர் ஆவணங்களை , நில அளவை திணைகள அதிகாரியிடம் இன்று ஒப்படைத்துள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்