பிலிப்பைன்ஸில் இன்று பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பொதுத் தேர்தல்

பிலிப்பைன்ஸில் இன்று பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பொதுத் தேர்தல்

பிலிப்பைன்ஸில் இன்று பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் பொதுத் தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 9:41 am

பிலிப்பைன்ஸில் இன்று நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வன்முறைகள் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிக பொலிஸாரின் பாதுகாப்பில் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

கடந்த வாரங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசாரங்களில் இடம்பெற்ற வன்முறைகளில் 15 பேர் கொல்லப்பட்டதுடன் கடந்த சனிக்கிழமை மேயர் பதவிக்காக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர் பிலிப்பைன்சின் தென் பகுதியில் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் புதிய ஜனாதிபதி ,உப ஜனாதிபதி, செனட் உறுப்பினர்கள் உள்ளிட்ட 18,000 தலைவர்கள் இன்றைய தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இன்றைய தேர்தலில் வாக்களிப்பதற்கு 54 மில்லியன் மக்கள் தகுதிப் பெற்றுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்