கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படாது

கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படாது

கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படாது

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 5:17 pm

கைத்தொலைபேசிகளை பயன்படுத்துவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில் கைத்தொலைபேசியில் உரையாடுவதால் மூளை புற்று நோய் ஏற்படாது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கைத்தொலைபேசியில் உரையாடும் போது உருவாகும் மின் காந்த அதிர் வலைகள் காதுவழியாக சென்று மூளையை தாக்கி புற்று நோயை ஏற்படுத்தும் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது.

இது உண்மையா என அறிய அவுஸ்திரேலியாவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆராய்ச்சியை மேற் கொண்டனர்.

அதில் கைத்தொலைபேசி அதிகம் பேசுவதால் மூளைப் புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் 1987,–ம் ஆண்டில் தான் செல்போன் உபயோகம் புழக்கத்தில் வந்தது.

எனவே 1982 ஆம் ஆண்டுக்கு பின் பிறந்தவர்களிடம் இருந்து இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது. அவற்றில் அதிக நேரம் கைத்தொலைபேசி பேசுவதால் மூளைப் புற்றுநோய் பாதிக்கவில்லை என்பது தெரிய வந்தது.

அதே நேரத்தில் 70 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே மூளைப் புற்று நோய் இருந்தது. ஆகவே கைத்தொலைபேசிக்கும், மூளைப் புற்று நோய்க்கும் சம்பந்தமில்லை என தெரிய வந்துள்ளது. ஆகவே வதந்திகளை நம்ப வேண்டாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்