எந்திரன்-2 வௌிவரும் திகதி அறிவிப்பு

எந்திரன்-2 வௌிவரும் திகதி அறிவிப்பு

எந்திரன்-2 வௌிவரும் திகதி அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 5:27 pm

ரஜினி நடிப்பில் சங்கரின், பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் எந்திரன்-2 படம் எப்போது வெளிவரும் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படம் ரூ.350 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

இந்தியாவிலேயே அதிக செலவில் உருவாக்கப்படும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இந்தி நடிகர் அக்ஷய்குமார், எமிஜக்சன் உள்பட பலர் நடிக்கிறார்கள். வெளிநாட்டு ஸ்டண்ட் மாஸ்டர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணிபுரிகிறார்கள். நவீன தொழில்நுட்பத்துடன் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன.

தற்போது சென்னை, டெல்லியில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்து ‘2.0’ படக்குழுவினர் மொராக்கோ, பொலிவியா நாடுகளுக்கு செல்லவிருக்கின்றனர். அங்கு பாடல் காட்சிகளும், வேறுசில காட்சிகளும் படமாக்கப்படுகின்றது. படப்பிடிப்பு நடைபெறும்போதே கிராபிக்ஸ் மற்றும் தொழில்நுட்ப பணிகளையும் செய்யவுள்ளனர்.

இந்நிலையில், இப்படம் வௌிவரும் திகதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த வருடம் (2017) தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் மே மாதத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க இருக்கிறார்களாம். அதைத் தொடர்ந்து இறுதிக்கட்ட பணிகளை துரிதமாக நடத்தி முடித்து, தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்