தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 7:01 am

உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களே உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என அம்பாறை வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தின் விடுதியில் வழங்கப்பட்ட உணவை உட்​கொண்டதன் பின்பே நேற்றிரவு மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் மாணவப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்