இலங்கையில் நாளாந்தம் 658 கருக்கலைப்புக்கள்

இலங்கையில் நாளாந்தம் 658 கருக்கலைப்புக்கள்

இலங்கையில் நாளாந்தம் 658 கருக்கலைப்புக்கள்

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 8:39 pm

இலங்கையில் நாளாந்தம் 658 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.

கருக்கலைப்பை சட்டபூர்வமாக்க வேண்டுமா என்ற தொனிப்பொருளில் சுகாதார கல்விப் பணியகத்தில் இன்று நடைபெற்ற கருத்தாடலின்போது இந்த தகவல் வெளியானது

இலங்கையின் நடைமுறை சட்டத்திற்கு அமைய கருக்கலைப்பு சட்டவிரோதமானது என்பதுடன் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்பை மேற்கொள்வதற்கான அனுமதி இருக்கின்றது.

எனினும் நாட்டில் இடம்பெறுகின்ற சட்டவிரோத கரு கலைப்புக்கள் அநேகமான தாய்மாரின் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளதென சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

2014 ஆம் ஆண்டு இலங்கையில் 112 தாய் மரணங்கள் சம்பவித்துள்ளன. 112 மரணங்களில் 14 மரணங்களுக்கு சட்டவிரோத கருக்கலைப்புக்களே காரணமாக அமைந்துள்ளன.

இலங்கையில் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவோர் மத்தியிலேயே அதிகளவில் கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இலங்கையியின் இளம் சந்ததியினர் மத்தியிலும் குறிப்பிடத்தக்களவு கருக்கலைப்பு காணப்படுவதாக இதன்போது தெரியவந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்