ஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

09 May, 2016 | 12:32 pm

ஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 73 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் மத்திய மாகாணத்தில் அதிவேக வீதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 73 பேர் உயிரிழந்ததுடன், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

இரண்டு பயணிகள் பஸ்கள் மற்றும் எரிபொருள் ஏற்றிச்சென்ற வாகனம் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

125 பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸூம் எரிபொருள் வாகனமும் விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் மற்றுமொரு பஸ் மோதியுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், அவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்