ஹம்பாந்தோட்டையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்

ஹம்பாந்தோட்டையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்

ஹம்பாந்தோட்டையில் வீசிய பலத்த காற்றினால் வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2016 | 12:05 pm

ஹம்பாந்தோட்டை, வலஸ்ஸமுல்ல பகுதியில் வீசிய பலத்த காற்றினால் சில வீடுகள் சேதமடைந்துள்ளன.

வலஸ்ஸமுல்ல கனுமுல்தெனிய பிராந்தியத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக நேற்று (05) இரவு சில வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதேவேளை இன்று (06) மாலையும் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதுதவிர மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை வேளைகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருகின்றது.

கடும் மழை காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர் மழையின் காரணமாக மலையத்தில் ஆறுகள் சிலவற்றின் நீர்மட்டமும் அதிகரித்து காணப்படுகின்றது.

மலையகத்தில் இருந்து ஊற்றெடுக்கும் களனி மற்றும் மகாவலி ஆறுகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரிக்கும் சாத்தியமுள்ளதால், இந்த ஆறுகளை அண்மித்து வசிப்பவர்களை அவதானமாக செயற்படுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்