வரக்காபொலயில் காணாமற்போயிருந்த இளைஞரின் சடலம் இறப்பர் தோட்டத்திலிருந்து மீட்பு

வரக்காபொலயில் காணாமற்போயிருந்த இளைஞரின் சடலம் இறப்பர் தோட்டத்திலிருந்து மீட்பு

வரக்காபொலயில் காணாமற்போயிருந்த இளைஞரின் சடலம் இறப்பர் தோட்டத்திலிருந்து மீட்பு

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2016 | 5:46 pm

கேகாலை, வரக்காபொல, எத்னாவல பிரதேசத்தின் இறப்பர் தோட்டமொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தியபுபுல, கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான பிரதீப் ஆரியபால எனும் இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான பிரதீப் ஆரியபால, மின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி வாகன அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஆரியபால, வரக்காபொல சென்றிருந்ததாக அவரின் பெற்றோர் தெரிவித்தனர்.

எனினும், ஆரியபால தொடர்பில் கடந்த 22 ஆம் திகதி முதல் எவ்வித தகவலும் கிடைக்காமையினால் பெற்றோர் 24 ஆம் திகதி தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அவரின் சடலம் வரக்காபொல, எத்னாவல பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்று தமக்கு அறிவித்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சடலத்தைக் குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளதுடன மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்