யோசித வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி கோரி விடுத்திருந்த கோரிக்கை நிராகரிப்பு

யோசித வெளிநாட்டுப் பயணத்திற்கு அனுமதி கோரி விடுத்திருந்த கோரிக்கை நிராகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2016 | 5:10 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோசித ராஜபக்ஸ வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி விடுத்திருந்த கோரிக்கை கடுவலை நீதவான் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் உகண்டாவிற்குப் பயணிப்பதற்காக நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

உகண்டா அரசின் அழைப்பின் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஸவின் இந்தப் பயணத்தின் போது யோசிதவையும் இணைத்துக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நேற்று (05) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், இந்த கோரிக்கைக்கு பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மறுப்புத் தெரிவித்த நிலையில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாம் திகதி வாக்குமூலம் ஒன்றை வழங்க இருந்த நிலையில், யோசித அதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்ததாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று அறிக்கை சமர்பித்துள்ளனர்.

10 ஆம் திகதி வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ள நிலையில், 11 ஆம் திகதி அவர் வெளிநாடு செல்வதற்கு மறுப்பு தெரிவிப்பதாவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்