மட்டக்களப்பில் காணாமற்போனவர்களின் குடும்ப அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் காணாமற்போனவர்களின் குடும்ப அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

06 May, 2016 | 1:43 pm

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாற்போனவர்களின் குடும்ப அமைப்புகள் ஒன்றிணைந்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல் மற்றும் காணாமல் போனவர்களுக்கு நீதி கோரியும் அம்பாறையில் காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரமத்தியில் ஆரம்பமான கவனயீர்ப்பு ஊர்வலம் மாவட்ட அரசாங்க அதிபரின் காரியாலயம் வரை சென்றது.

மாவட்ட அரச அதிபர் காரியாலயத்திற்கு சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மகஜரை மேலதிக அரச அதிபரிடம் கையளித்ததன் பின்னர் மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்திலும் அவரின் பிரதிநிதியிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்