பொதுநலவாய விளையாட்டு விழாவின் இலக்குகளை அடைய நடவடிக்கை எடுப்பதாக தயாசிறி தெரிவிப்பு

பொதுநலவாய விளையாட்டு விழாவின் இலக்குகளை அடைய நடவடிக்கை எடுப்பதாக தயாசிறி தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2016 | 8:46 pm

தேசிய ஒலிம்பிக் குழுவுடன் ஒத்துழைத்து செயற்பட்டு அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழாவின் இலக்குகளை அடைய நடவடிக்கை எடுப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் ஆசிய வலய கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இதனைக் கூறினார்.

பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் தலைவரான லூவிஸ் மார்ட்டின் அம்மையாரின் தலைமையில் ஆசிய வலயத்துக்கான கூட்டம் கொழும்பில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுநலவாய விளையாட்டு சம்மேளனத்தின் ஆசிய வலயத்திற்குட்பட்ட எட்டு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்