தண்ணீர் பாவனை 12 வீதத்தால் வீழ்ச்சி

தண்ணீர் பாவனை 12 வீதத்தால் வீழ்ச்சி

தண்ணீர் பாவனை 12 வீதத்தால் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

06 May, 2016 | 9:30 am

கடந்த காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் தண்ணீர் பாவனை 12 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக்காலம் நிறைவடைந்துள்ளமை மற்றும் அதிக உஷ்ணமான காலநிலையில் ஓரளவு மாற்றம் என்பன இதற்குக் காரணமாகும் என சபையின் தலைவர் அலாவுதீன் அன்சார் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொதுவாக 1.2 மில்லியன் தொன் நீர் நாளாந்தம் தேவைப்படுகின்ற போதிலும், கடந்த காலத்தில் அந்த அளவு 240000 தொன்களால் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உஷ்ணம் நிலவியிருந்த காலப்பகுதியில் நீருக்கான தேவை 15 வீதத்தால் அதிகரித்துக் காணப்பட்டதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் மேலும் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்