கேரள கஞ்சாவுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது

கேரள கஞ்சாவுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது

கேரள கஞ்சாவுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

06 May, 2016 | 10:25 am

இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட 114 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கல்பிட்டிக்கு வடக்கேயுள்ள முள்ளிக்குளம் அருகே கேரள கஞ்சாவுடன் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 மீனவர்களும், இலங்கை மீனவர் ஒருவரும் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட மீனவ படகொன்றை சோதனையிட்டபோது, படகில் பொதியிடப்பட்டிருந்த கேரள கஞ்சா தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறிப்பிட்ட படகு கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், படகிலிருந்த 15 வயதுடைய சிறுவன் உட்பட 5 இந்திய மீனவர்களையும், அந்த பகுதியிலுள்ள உள்ளூர் மீனவர் ஒருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் மீன்பிடி படகு என்பவற்றுடன் கைதான மீனவர்களை, மேலதிக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு கல்பிட்டி பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதுதொடர்பில் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்