குறை நிரப்பு பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் குளறுபடிகள்: ஆராய குழுவொன்று நியமனம்

குறை நிரப்பு பிரேரணை தொடர்பிலான வாக்கெடுப்பில் குளறுபடிகள்: ஆராய குழுவொன்று நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

06 May, 2016 | 9:58 pm

குறை நிரப்பு பிரேரணை தொடர்பில் நேற்று (05) நடைபெற்ற வாக்கெடுப்பினால் இன்றும் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திஸாநாயக்க இன்று சபாநாயகரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் நான்கு பேர் அடங்கிய குழுவொன்றை சபாநாயகர் நியமித்துள்ளார்.

விவாதத்தின் போது ஏற்பட்ட அமைதியின்மையினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்