குறைநிரப்புப் பிரேரணைக்காக பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய குழு

குறைநிரப்புப் பிரேரணைக்காக பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய குழு

குறைநிரப்புப் பிரேரணைக்காக பாராளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய குழு

எழுத்தாளர் Staff Writer

06 May, 2016 | 11:25 am

குறைநிரப்புப் பிரேரணைக்காக நேற்று (05) மாலை பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (06) சபையில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று கூடியபோது, நேற்று மாலை இடம்பெற்ற குறைநிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு குறித்து எதிர்கட்சியின் பிரதம கொரடா அனுரகுமார திசாநாயக்க கேள்வியெழுப்பினார்.

வாக்கெடுப்பில் பிரச்சினை காணப்படுவதாக அனுரகுமார திசாநாயக்க சபையின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

இதன்போது ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களிடையே சபையில் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டது.

குறைநிரப்புப் பிரேரணை மீதான நேற்றைய வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ஸ. எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் சமல் ராஜபக்ஸ ஆகியோர் தலைமையில் குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் சபையில் அறிவித்தார்.

அதன் பின்னர் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்