கடந்த காலப்பகுதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை

கடந்த காலப்பகுதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை

கடந்த காலப்பகுதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

06 May, 2016 | 11:13 am

கடந்த காலப்பகுதியில் நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டமையுடன் அதிகாரிகள் எவரேனும் தொடர்புபட்டுள்ளனரா என்பது தொடர்பான விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (09) ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

அந்த குழுவின் விசாரணை அறிக்கை ஒரு மாதகாலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபையின் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன குறிப்பிட்டார்.

மின்சார விநியோகம் தடைப்பட்ட சம்பவங்களுடன் அதிகாரிகள் எவரேனும் சம்பந்தப்பட்டுள்ளமை கண்டறியப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கும் அதிகாரம் அந்த குழுவிற்கு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குள் விசாரணைக் குழு மின்சக்தி அமைச்சின் செயலாருக்கு அறிக்கையை சமர்பிக்கும் என்றும் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்